நடிகைகளைப்பொறுத்தவரை பல மொழிகளிலும் பரவலாக நடிப்பதால் அவர்களுக்கு அவர்களே டப்பிங் பேசுவதற்கு நேரமே இருக்காது. அதனால் யாராவது எப்படியாவது பேசிவிட்டு போகட்டும் என்று விட்டு
விடுவார்கள்.
இன்னும் சிலருக்கு டப்பிங் பேச ஆசையிருக்கும், ஆனால் அவர்களின் குரல் எடுபடாது. இந்த இரண்டாவது ரகம்தான் அனுஷ்கா.ஆரம்ப கால படங்களிலேயே அவர் டப்பிங் பேச ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.
ஆனால், அனுஷ்காவின் குரல் கரகரவென இருப்பதால் யாரும் அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.
ஆனால், தற்போது அனுஷ்கா, இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் தனக்குத்தான் டப்பிங் பேச வேண்டும் என்று பிரத்யேகமாக அப்பட டைரகடர் செல்வராகவனிடம் வேண்டுகோள் வைத்தாராம் அனுஷ்கா.
அவர் அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள அனுஷ்கா, உச்சரிப்பு வராத சில தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த தனது உதவியாளர்கள் மூலம் பயிற்சி பெற்று டப்பிங் பேச எப்போது இயக்குனர் அழைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்.
0 கருத்து:
கருத்துரையிடுக