ஆந்திர தொழிலதிபர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.5கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.50 இலட்சம் முன்பணமாக பெற்றதாக ஆந்திர தொழிலதிபர் ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டார்.
தன்னை ஏமாற்றிவிட்டதாக பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மீது அவர் மோசடி வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிக்கல் அவரை சிறிது காலமாக எதிர்கொண்டு வந்தாலும் அதனை தீர்க்க அவர் எந்த முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.
பல கேலி கிண்டல்களுக்கு இடையே இன்று திரை உலகில் ஒரு கலெக்ஷன் நடிகராக உருவாகியிருக்கும் பவர் ஸ்டாரின் வாழ்க்கையில் இந்த மோசடி வழக்கு ஒரு பின்னடைவுதான் என அவரது நலன்விரும்பிகள் ஆழ்ந்த கவலையில் உள்ளனராம்.
0 கருத்து:
கருத்துரையிடுக