கதிர்காமம் ஆலய மாணிக்க கங்கை வளாகத்தில் இருந்து இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்க கங்கை அமைந்துள்ள வனப் பகுதியில் இவர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கதிர்காமம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலம் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக