‘கோச்சடையான்‘ படத்தில் வைரமுத்து எழுதிய ‘எதிரிகள் இல்லை‘ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் சொந்த குரலில் பாடி இருக்கிறார் ரஜினி. வரலாற்றுக் கதையை தழுவி உருவாகும் “கோச்சடையான்’ படத்தில் அப்பா – மகன் வேடத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். சௌந்தர்யா
இயக்கும் இப்படம் மோஷன் கேப்சர் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. ரஜினிக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடிக்கின்றனர். சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
“கோச்சடையான்’ படத்தில் இரட்டை வேடங்களில் ரஜினி இருப்பது போன்ற ஸ்டில் திங்கள்கிழமை வெளியானது. இதை படத்தின் இயக்குநரும், ரஜினியின் மகளுமான சௌந்தர்யா தன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக சென்னையில் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் உள்ளிட்டோர் டப்பிங் பேசி வருகின்றனர். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜப்பான், ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்யும் பணிகள் தொடங்கவுள்ளன.
கே.எஸ்.ரவிகுமார் கதாசிரியராக பொறுப்பேற்றுள்ள இப்படத்தின் பாடல் சி.டி. மே மாதம் வெளியாகிறது. ஜூலையில் உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. கடைசியாக 2010-ஆம் ஆண்டில் வெளிவந்த “எந்திரன்’ படத்தில் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார் ரஜினிகாந்த்.
ஏற்கனவே மன்னன் படத்தில் அடிக்குது குளிரு என்ற பாடலை இளையராஜா இசையில் ரஜினி பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக