புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் விஜய்யின் தலைவா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'துப்பாக்கி' வெற்றிக்குப் பின்பு விஜய் நடிக்கும் தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடிக்கின்றனர்.

ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்கிய படக்குழு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக அவுஸ்திரேலியா சென்றது.

அங்கு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி இருந்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது முடிவடைந்து விட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே 'தலைவா' படத்தின் ஆடியோவை வரும் மே மாதம் வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். படம் யூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top