கேகாலையில் ஏழு வயது பாடசாலை மாணவனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை நேற்று கேகாலை நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தி 48 மணித்தியாலங்கள் அவரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதியை பெற்றுக் கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டாம் தரத்தில் கல்விகற்றுவந்த குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பாமையால் அவரது தந்தை கேகாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவனின் சடலம் பாழடைந்த வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக