யாழ். நவற்கிரி பகுதியில் ஆடுகளை களவாக பிடித்து கன்ரர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது
செய்துள்ளதுடன், களவாடப்பட்ட ஆடுகளையும் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருக்கும் போது சந்தேகத்துக்கிடமான முறையில் கன்ரர் வாகனத்தில் ஆடுகள் ஏற்றப்பட்டு இருந்துள்ளன.
இதையடுத்து கன்ர வாகன ஓட்டுனரையும் அவரோடு வந்த உதவியாளரையும் பொலிஸார் பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போதே ஆடுகள் களவாகப் பிடிக்கப்பட்டு போலி இலக்கத்தகடு பொருத்திய வாகனத்தில் ஏற்றப்பட்ட உண்மை தெரிய வந்தது. இதையடுத்து அச்சுவேலி பொலிஸார் இருவரையும் கைது செய்து ஆடுகளையும் மீட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக