மலேசியாவில் நடைபெறும், உலகளாவிய மிஸ் இந்தியா போட்டியில்,செவி திறனற்ற நெகால் பங்கேற்கிறார்.
பிரிட்டனில் லீசெஸ்டர் பகுதியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் நெகால் போகெய்தா, 20. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், "மிஸ் இந்தியா யு.கே.,´ பட்டத்தை வென்றார். கேட்கும் திறன் இல்லாத நெகால், தங்கை ஜெய்ஷா மூலம் தனது கருத்தை வெளிப்படுத்துகிறார்.
மலேசியாவின், கோலாலம்பூர் நகரில், வரும், 27ம் தேதி, "உலகளாவிய மிஸ் இந்தியா´ போட்டி நடைபெற உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 40 பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் நெகால், பங்கேற்கிறார்.
"இந்திய பாரம்பரிய உடை போட்டி, அறிவு திறன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் எளிதாக வெற்றி பெறுவேன். ஊனமுற்ற பெண்கள் பெரிய அளவில் சாதிக்க முடியும் என்ற விஷயத்தில் நான் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன்,´´ என்கிறார் நெகால்.
இந்திய பாலிவுட் நடன இசைக்கு ஏற்ப நடனமாடி பழகி வருகிறார். இசையைக் கேட்கும் திறன் இல்லாவிட்டாலும், இசைக் கருவிகளின் அதிர்வின் மூலம், தனது நடனப் பயிற்சியைத் தொடர்கிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக