திருப்பூர் பூம்புகார் நகர், வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 14.5.11ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் இறந்த நிலையில் பெண் சடலம் கிடந்தது.
விசாரணையில் இறந்த பெண் பூம்புகார் நகரை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி அமுதா (32) என்பது தெரிய வந்தது. அமுதாவுடன் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகராஜ் மனைவி சத்யா (29) பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
அமுதாவும், சத்யாவும் தோழிகள். சம்பவத்தன்று வேலை முடிந்து இருவரும் வீடு திரும்பும் போது, அமுதா அணிந்திருந்த 4.5 பவுன் தங்க நகைக்கு ஆசைப்பட்டு தலையில் கடப்பாறையால் தாக்கி அவரை சத்யா கொன்றார்.
பின்னர் நகைகளை பறித்து சடலத்தை சாக்கடையில் வீசி சென்றது தெரிய வந்தது. திருப்பூர் தெற்கு போலீசார் சத்யாவை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக