பிரான்ஸ் யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மற்றுமொரு பிரான்ஸ் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவட்டுன பகுதியில் 23 வயதான பிரான்ஸ் யுவதியே துஷ்பிரயோகத்திற்குள்ளாகி உள்ளார்.
காலி, ஹபராதூவ பகுதிலுள்ள ஹோட்டலில் தங்கியிருந்த யுவதியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த பிரான்ஸ் பிரஜையின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு இரவு நேர விருந்துக்கு சென்றிருந்தபோது தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக யுவதி பொலிஸ நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்திடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக