ரெண்டாவது படம், பேச்சியக்கா மருமகன், ஒருவர் மீது இருவர் சாய்ந்து, யாருடா மகேஷ் மற்றும் நான் ராஜாவாகப் போகிறேன் ஆகிய 5 படங்கள் இன்று ரிலீயாகியுள்ளன.
இந்த வெள்ளிக்கிழமை தமிழ் ரசிகர்களுக்கு செம வெரைட்டியான தினம் தான். பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இன்று ரிலீஸாகாவிட்டாலும் இன்று 5 படங்கள் ரிலீஸாகியுள்ளன. தமிழ் படம் என்ற பெயரில் பலரையும் கிண்டலடித்து நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைத்த அமுதனின் அடுத்த படமான ரெண்டாவது படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ரெண்டாவது படம் தமிழ் படத்தை முந்துமா?
எங்கள் சினிமா ஆசிரியர் சங்கர் நார்வே சென்றுள்ளதால் ரசிகர்களாகிய நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டு எந்த படம் நன்றாக இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லுங்கள்.
இன்று ரிலீஸான படங்களைப் பார்ப்போம்...
பேச்சியக்கா மருமகன்
மாமியார், மருமகன் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பேச்சியக்கா மருமகன். மாமியாராக ஊர்வசியும், பாசமான மருமகனாக தருண் கோபியும் நடித்துள்ளனர்.
ரெண்டாவது படம்
விமல், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி, சஞ்சனா சிங் நடித்துள்ள படம் ரெண்டாவது படம். முழு நீள காமெடி படம். தமிழ் படத்திற்கு பிறகு அமுதன் இயக்கியுள்ள படம் இது.
யாருடா மகேஷ்
சந்தீப் கிஷன், டிம்பிள் நடித்துள்ள காதல் காமெடி படம் யாருடா மகேஷ். படத்தை மதன் குமார் இயக்கியுள்ளார்.
நான் ராஜாவாகப் போகிறேன்
வெற்றிமாறன் தயாரிப்பில் பிரித்விராஜ்குமார் இயக்கத்தில் நகுல், சாந்தினி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நான் ராஜாவாகப் போகிறேன். இந்த படம் நகுலுக்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒருவர் மீது இருவர் சாய்ந்து
முக்கோண காதல் கதையான ஒருவர் மீது இருவர் சாய்ந்து படத்தில் லகுபரன், ஸ்வாதி, சானியா நடித்துள்ளனர். படத்தை பாலசேகரன் இயக்கியுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக