கனடாவை சேர்ந்த72 வயது பெண் ஒருவர் கடுமையான நோய் தாக்கி அவதிப்படுவதால் அவரை மருத்துவர் உதவியுடன் கருணைக்கொலை செய்ய சுவிஸ் அரசு அனுமதியளித்துள்ளது. உலகிலேயே
சுவிட்சர்லாந்து நாட்டில் மட்டும்தான் இதுபோன்ற கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படுகின்றன.
Susan Griffiths என்ற 72 வயது கனடிய பெண், multiple system atrophy என்ற நோயால் தாக்கப்பட்டு, முற்றிலும் பலமிழந்து படுத்த படுக்கையாக கடந்த சில வருடங்களாக சுவிஸ் நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தினந்தோறும் தனக்கு ஏற்படும் வலியை போக்க டஜன் கணக்கில் மாத்திரைகளை உட்கொண்டு, தினம் தினம் உயிருக்கு போராடினார்.
இந்நிலையில் தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என சுவிஸ் அரசிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடன் அறிக்கை பெற்ற சுவிஸ் அரசு, அவர் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் அவரை கருணைக்கொலை செய்ய அனுமதிக்கலாம் என அனுமதி அளித்தது.
Susan Griffiths கருணை கொலை செய்யப்படும் முன் கனடிய அரசுக்கு அவர் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னை போன்று தீராத வியாதிகளினால் அவதிப்படுவோரை கருணைக்கொலை செய்ய கனடிய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என இமெயில் மூலம் தெரிவித்துள்ளார். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அருகில் இருக்கும் சமயத்தில் அவர்களுடைய முழு சம்மதத்துடன் அவர் கருணைக்கொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன்
0 கருத்து:
கருத்துரையிடுக