காயன்ஸ் பிக்சர் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படமொன்றில் வித்தியாசமான கதாபாத்தில் நடிகர் விக்னேஷ் நடிக்கிறார்.
இந்த படத்தில் விக்னேஷ் தன்னை முழுவதுமாக மாற்றி கெட்டப் மற்றும் நடை, உடை, பாவனை
எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு கதாபாத்திரத்தின் தன்மைக்காக தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் ராம்கிரிஸ் மிர்ணாலி சொன்ன கதையைக் கேட்டவுடன் உடனே 60 நாட்கள் திகதி கொடுத்து ஒத்துக் கொண்டுள்ளார்.
படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ளது. இயக்குனர் ராம்கிரிஸ் மிர்ணாலி இந்த படத்தின் கதையை பல நடிகர்களிடம் கதையை எடுத்துக் கூறி திகதி கேட்க அத்தனை நடிகர்களுமே நடிக்க மறுத்த கதையை விக்னேஷ் கேட்டவுடன் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்தப் படம் முழுவதும் கொடைக்கானல், மூணார், கேரளா போன்ற பகுதியிலேயே படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
நாயகன் விக்னேஷ் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது காயன்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம்.
ஒளிப்பதிவு ரவி சீனிவாசன். மற்ற கலைஞர்கள் தெரிவு நடை பெற்றுக் கொண்டிருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக