மீண்டும் இரட்டை கதாநாயகர்களை வைத்து இயக்கும் புதிய கதையில் நடிப்பதற்கு தனது சிஷ்யன் சசிகுமாரை ஒப்பந்தம் செய்து விட்டார் பாலா.
பின்னர் இன்னொரு ஹீரோ யாரு என தேடிய போது, பிரபு தானாகவே வந்து தனது மகன் விக்ரம்பிரபுவை முன்மொழிந்தார்.
பாலாவும் விக்ரம்பிரபுவை அழைத்துப் பேசினாராம். ஆனால், சசிகுமாரின் தம்பி கதாபாத்திரத்துக்கு அவர் பொருந்தவில்லையாம். அவருக்கு அண்ணன் மாதிரி இருக்கிறாரே என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.
இதையடுத்து கடல் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக், அந்த வேடத்துக்கு கச்சிதமாக இருப்பார் என்று சிலர் சொல்ல, அவரை நேரில் அழைத்திருக்கிறார்.
நிஜமாலுமே சசிகுமாரின் தம்பி மாதிரியே இருந்தாராம். அதனால் கெளதமை ஓ.கே செய்யும் முடிவில் இருந்தாராம் பாலா. ஆனால் அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையின்போது, என் மகன் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஒரு நிபந்தனை என்றாராம் நவரச நாயகன் கார்த்திக்.
என்ன நிபந்தனை? என்று பாலா நிமிர்ந்து பார்த்த பாலாவுக்கு பெரும் அதிர்ச்சி.
என் மகன் உங்கள் படத்தில் நடிக்க வேண்டுமென்றால், வருகிற தேர்தலில் நான் போட்டியிடும் தொகுதிக்கு வந்து எனக்காக நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றாராம் கார்த்தக்.
அதைக்கேட்டு ஆடிப்போன பாலா. உங்க பையன் என் படத்துல நடிக்கிறதுக்கு, நான் தேர்தல்ல பிரச்சாரம் செய்றதுக்கு என்ன சம்பந்தம் இருக்கு என்று கோபத்துடன், அதற்கு மேல் பேச விரும்பாமல் அங்கிருந்து நடையை கட்டி விட்டாராம்.
0 கருத்து:
கருத்துரையிடுக