சிலியில் உள்ள வல்பரைசோ துறைமுகத்துக்கு அருகில் கொல்லிகுவே என்ற மலை பாங்கான இடம் உள்ளது. கடந்த நவம்பர் 21-ம் திகதி அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், பிறந்து 3
நாட்களேயான ஒரு குழந்தையை எடுத்து சென்று உயிரோடு எரித்து நரபலி கொடுத்துள்ளனர்.
இந்த குழுவின் தலைவன் ரமோன் கஸ்டாவோ. இவன் அந்த குழந்தை மதத்துக்கு எதிரானது என்றும் உலகம் அழியப் போகிறது என்றும் கூறி மற்றவர்களை நம்பவைத்துள்ளான்.
இதையடுத்து அந்த குழந்தையை உயிரோடு எரிக்கும் கொடூர சடங்கை அவனது குழுவை சேர்ந்தவர்கள் நடத்தி உள்ளனர்.
குழந்தையின் தாயையும் நம்பவைத்து இந்த கொடூர உயிர் பலியை நடத்தியுள்ளனர். பொலிசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளியாகி இருக்கிறது.
கொலைசெய்யப்பட்ட குழந்தையில் தாய் உள்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி கூறியதாவது,
பிறந்து 3 நாட்களே ஆன அந்த குழந்தையை உடையை அகற்றி உள்ளனர். பின்னர், குழந்தை சத்தம்போடாமல் இருக்க வாயில் டேப் சுற்றி இருந்தனர்.
அதன் பின்னர் குழந்தையை ஒரு பலகையில் வைத்து ஆவிகளை அழைப்பதாக கூறி பூஜை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தையை உயிரோடு எரித்து பலி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிலி நாட்டில் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குழுவில் 12 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இது போன்ற தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக