நாட்டில் பல பாகங்களிலும் பெய்து வருகின்ற அடைமழை காரணமாக கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப்பரீட்சைக்கு செல்லமுடியாது பரீட்சார்த்திகள் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் பரீடசை எழுதிவிட்டு வீட்டுக்கு போமுடியாமல் 150 மாணவர்கள் மாஹஓயாவில் பரிதவித்துள்ளனர்.
இவர்களில் 50 மாணவர்களுக்கு மாஹஓயா பெல்லங்வில விஹாரையிலும் மாணவிகள் 100 பேர் மாஹஓயா பிரதேச செயலகத்திலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு உடை,தங்குமிட வசதிகளை கொடுத்து செவ்வாய்க்கிழமை பரீட்சைக்கு தோற்றும் வகையில் வசதிவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மாஹஓயா பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக