ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்று மொழிகளிலும் மினிமம் கியாரண்டி ஹீரோ. அர்ஜுன் ஒரு தேசப்பற்று மிக்க நடிகர், இயக்குனர், ஸ்டண்ட் மாஸ்டர். அவர் நடிக்கும் படங்களில் காலைத் தூக்கி அடித்து
சண்டைபோடுவார். பறந்து பறந்து எதிரிகளை தாக்குவார். அல்லது ஹீரோயின்களை கட்டிப்பிடித்து டூயட் ஆடுவார். முதல்வன், பொம்மலாட்டம் மாதிரி அரிதாக சில படங்களில் நடிக்கவும் செய்வார்.
55 வயதைத் தாண்டிவிட்ட அர்ஜுன் இப்போது பக்குவமடைந்து விட்டார். தன் வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ற கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து விட்டார். ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற தன் பிடிவாதத்தையும் விட்டு விட்டார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராகி உள்ள பிரசாத் என்ற படத்தில் 12 வயது சிறுவனுக்கு அப்பாவாக நடித்துள்ளார். தசைக்குறைபாடு நோயுள்ள தன் மகனை காப்பாற்ற போராடும் தந்தையாக நடித்துள்ளார். மணிரத்தினத்தின் கடல் படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.
சிலர் கடல் படத்தில் அர்ஜுன்தான் வில்லன் என்கிறார்கள். சிலர் ஹீரோவின் தந்தை என்கிறார்கள். எப்படியோ நல்ல பக்குவமான கேரக்டரில் நடிக்கிறார் என்பது மட்டும் உறுதி. வசந்த் இயக்கும் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் கோச்சராக நடிக்கிறார். வீரப்பன் கதையை சொல்லும் வனயுத்தம் படத்தில் போலீஸ் அதிகாரி விஜயகுமாராக நடித்துள்ளார். அர்ஜுனின் இந்த மாற்றம் அவரை அடுத்த ரவுண்டுக்கு தயார்படுத்தியிருக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக