வீட்டின் மீது மண்மேடுகள் சரிந்து விழுந்ததினால் மாத்தளையில் 5 பேர் பலியானதுடன் பலத்த காயங்களுடன் நான்கு பேர் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தோட்டை, அல்வத்தை,லோன்வில,வெல்லன்காவத்த மற்றும் திக்கும்பர ஆகிய இடங்களிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சுதுகங்கையை கடக்க முயன்ற ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் சுமார் 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் மாத்தளை மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
அது மட்டுமன்றி மண்திட்டு சரிந்து விழுந்ததில் மாத்தளை-கண்டி வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக