கண்டி ஹந்தானை மலைப் பகுதிக்கு கல்வி சுற்றுலா சென்ற பல்கலைக்கழக மாணவ மாணவியர் நிர்க்கதியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையான பனி மூட்டம் மற்றும் மழை காரணமாக மாணவர்கள் ஹந்தானை மலைப் பகுதியில் சிக்கியுள்ளனர். சுமார் 250 பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வர்று சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறு நிர்க்கதியாகியுள்ளனர்.
மலைப் பகுதியில் சிக்கியுள்ளதாக பல்ககை;கழக மாணவ மாணவியர் பொலிஸாருக்கு செல்லிடப் பேசி மூலம் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இராணுவத்தினரும் இணைந்து மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேர் இராணுவத்தினரால் மீட்பு: 40 பேர் வைத்தியசாலையில்!
கண்டி, ஹந்தானை மலைப்பகுதியில் சுற்றுலாவுக்குச் சென்ற நிர்க்கதியான நிலையில் தவித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரை இன்று காலை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
நேற்று மலைப்பகுதியில் நடைபயணம் மேற்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 400 பேரும் சீரற்ற காலநிலை காரணமாக அங்கு அகப்பட்டுக்கொண்டதையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இராணுவத்தினர் மாணவர்களைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காப்பாற்றப்பட்டவர்களில் 40 பேர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக