புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பசிபிக் கடலில் உருவாகியுள்ள சூறாவளி புயல், பிஜி தீவை மிக கடுமையாக தாக்கி உள்ளது.பசிபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் பிஜி தீவில் 300 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் அந்நாட்டின் விமான சேவை
ரத்து செய்யப்பட்டுள்ளது.

புயல் வீச தொடங்கியதும் ஏராளமான மரங்கள் சாய்ந்து விட்டன. பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

இப்புயலுக்கு இதுவரையிலும் 4 பேர் பலியாகி உள்ளனர், 8 பேரை காணவில்லை.

புயலை தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் மலை பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிஜி தீவை சுற்றியுள்ள குட்டி தீவுகள் இந்த புயலால் மூழ்கும் அபாயம் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கர புயலை சமாளிக்க தேவையான உதவிகளை வழங்கும் படி, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து நாடுகளின் உதவியை பிஜி தீவின் இராணுவ தலைவர் வொரிக் பைனிமராமா கோரியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top