தேனி மாவட்டம் கம்பத்தில் நிச்சயதார்த்தத்திற்கு வந்த மாப்பிள்ளையை பெண்ணின் சகோதரர் கத்தியால் குத்தியதில் மாப்பிள்ளை உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பம் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது தங்கையை சரவணன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர்களுடன் வந்து பெண் பார்த்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து இன்று நிச்சயதார்த்ததத்திற்கு உறவினர்களுடன் சரவணன் வந்துள்ளார்.
அப்போது மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று பெண்ணின் அண்ணன் ஜெயபாண்டி தகராறு செய்துள்ளார். பெண்ணின் உறவினர்கள் ஜெயபாண்டியை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை என்றும், கோபத்தில் கத்தியால் மாப்பிள்ளை சரவணனை குத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் இருந்த அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சரவணனை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்தவுடனேயே ஜெயபாண்டி தலைமறைவானார். இச்சம்பவம் குறித்து கம்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் பார்க்க வந்த இடத்தில் கத்திகுத்து உயிரிழப்பு என்ற செய்தி கம்பம் பகுதியிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக