அமெரிக்காவில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்த 6 வயது சிறுவன் சாகும் முன்பு தனது தாய்க்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 6 வயது சிறுவன் பிரையன் சாகும் முன்பு தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், ஐ லவ் யூ அம்மா. நான் சந்தோஷமாகவும், நலமாகவும் உள்ளேன். நல்ல மகனாக இல்லாததற்காக மன்னிக்கவும். நான் சொர்க்கத்தில் இருந்து உங்களை நேசிப்பேன், பிரையன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய ஆடம் லான்சா(20) பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முரட்டு பையன் என்று அவனை அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆடமின் நண்பர் ஒருவர் கூறுகையில், ஆடமிற்கு வலியை உணரும் தன்மை இல்லை.
அதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்பால் விளையாடுகையில் அவன் கீழே விழுந்து அடிபடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். அவனுக்கு நிறைய மனோரீதியான பிரச்சனைகள் இருந்தன என்றார்
0 கருத்து:
கருத்துரையிடுக