கடந்த 2003ஆம் ஆண்டு இந்திய திரையுலகில் காலடி பதித்த நடிகை நயன்தாரா இதுவரை 24 கதாநாயகர்களுடன் நடித்துளார். இந்நிலையில், அவரது வெள்ளி விழா நாயகனாக நயன் வரலாற்றில் இடம்பிடிக்கப்போகிறார் உதயநிதி ஸ்டாலின்.
2003ஆம் ஆண்டு ஜெயராமின் மலையாள திரைப்படம் மூலம் நடிகையான நயன்தாரா, 2005இல் சரத்குமாரின் ஐயா மூலம் கோலிவூட் வந்தார். அடுத்த ஆண்டே அதாவது 2006இல் வெங்கடேஷின் திரைப்படம் மூலம் டோலிவூட் போனார். கடந்த 2010ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் சூப்பர் திரைப்படம் மூலம் சாண்டல்வூட்டும் போனார்.
இதுவரை அவர் ரஜினிகாந்த், மம்முட்டி, மோகன் லால், வெங்கடேஷ், நாகர்ஜுனா, பாலகிருஷ்ணா, உபேந்திரா, அஜீத் குமார், விஜய், சூர்யா, ஜூனியர் என்.டி.ஆர், சரத்குமார், ஜெயராம், சிம்பு, ஜீவா, தனுஷ், விஷால், ஆர்யா, ஜெய், பிரபாஸ், ரவி தேஜா, கோபி சந்த், ராணா டக்குபாட்டி, திலீப் ஆகிய 24 ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தில் அவர் நடித்தால் நயனின் வெள்ளி விழா நாயகன் உதயநிதி ஸ்டாலின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார்கள், மூத்த நடிகர்கள், நடுத்தர வயது நடிகர்கள், இளம் நடிகர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் என்று பல தரப்பட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார் நயன்.
0 கருத்து:
கருத்துரையிடுக