பால் குடிமறவாத பச்சிளம் பாலகியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி அவரை படுகொலைச்செய்த சம்பவம் ஒன்று பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு வயதும் 3 மாதங்களுமே ஆன தனது பெறா மகளையே நபரொருவர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி
கொலைச்செய்துள்ளார்.
நிலைமை மோசமடைந்ததை அறிந்து குறித்த குழந்தையை காப்பாற்றுவதற்காக அந்த நபர் வைத்தியசாலைக்கு தூக்கிச் கொண்டு ஓடியுள்ளார். வைத்தியசாலைக்குள் வைத்து குழந்தைக்கு மிகவும் வன்மையாக முத்தம் கொடுக்கும் காட்சிகள் வைத்தியசாலையின் கண்கானிப்பு கமராவில் பதியப்பட்டுள்ளது.
இக்காட்சியினூடாகவே குழந்தையின் இறப்புக்கு மேற்படி நபரே காரணமென வைத்தியசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.பெரி மாக்கேனி என்ற 33 வயது நபரே இத்தகைய கொடூர செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்நபர் தனது காதலியின் ஒன்றரை வயது மகளான மில்லி மார்டின் என்ற குழந்தையையே இவ்வாறு துன்புறுத்தி கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குழந்தையின் தாயான ரிசெல் மார்டினை மூன்று மதங்களுக்கு முன் இங்கிலாந்தின் டிரோன் கிராமத்தைச் சேர்ந்த மாக்கேர்னி சந்தித்துள்ளார். மார்கேனியின் இச்சந்திப்பானது குழந்தையிடம் நெருங்குவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த குழந்தை கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு பிரிட்டனின் நீதிமன்றமொன்றில் நடைபெற்றுள்ளது. இதன்போது சிறிய கால அவகாசத்துக்குள் மேற்படி காமுகன் குழந்தையின் வாழ்வை காவுகொண்டுள்ளான் என அந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குழந்தை மில்லியின் விலா எழும்புகளில் 21 இடங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் நெற்றியில் காயங்கள் காணப்பட்டதாகவும் அக்குழந்தையின் வயிறு பலமாக தாக்கப்பட்டிருந்ததாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அதுமட்டுமின்றி மில்லி பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளாதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
'தனது சொந்த மகளையே காயங்களுக்குட்படுத்தி படுபாதகமாக கொலை செய்துள்ளான்' என மார்கேனி மீது மில்லியின் தாயான ரிச்செல் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்கேனி மீது கொலை, பாலியல் தாக்குதல், கொடூரமான உடல் காயங்களை ஏற்படுத்தியது போன்ற குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 2013 ஆம் ஆண்டு தண்டனை விதிக்கப்படுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக