புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தலைநகர் புதுடெல்லியில் பேருந்து ஒன்றில் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த ஒரு கும்பல், இதைத் தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை அடித்துத் தூக்கி வெளியே வீசி விட்டது.
நேற்றிரவு ஓடும் பேருந்தில் 23 வயது இளம்
பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில், இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம்.

அந்தப் பேருந்து புறப்பட்டு பத்து நிமிடமான நிலையில், பேருந்தில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர்.

இதை நான் ஆட்சேபித்ததையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர். பின்னர் என்னை தரதரவென இழுத்து பேருந்தை விட்டு கீழே தள்ளி விட்டனர்.

அந்தப் பெண்ணை பேருந்தின் கேபின் பகுதிக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து 5 பேரும் பலாத்காரம் செய்து நாசப்படுத்தினர்.

பின்னர் அவரை அருகே உள்ள ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டனர் என்றார்.

சம்பந்தப்பட்ட பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருபவர்.

அவருடன் வந்த நபர் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

இரவில் படம் பார்த்து விட்டு இருவரும் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top