மது போதையில் நின்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் வீதியில் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து அட்டகாசம் செய்ததுடன் மதுப் போத்தலை உடைத்து அவரின் வயிற்றில் குத்தி காயப்படுத்தியும் உள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை சாவகச்சேரி டச்சு வீதியிலிருந்து தபாலக வீதிக்குச் செல்லும் கண்டுவில் இரண்டாம் ஒழுங்கையில் இடம்பெற்றது.
சாவகச்சேரி நகர்ப் பகுதியில் பொலிஸாரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தோட்ட வெளியுடன் குடியிருப்பு இல்லாத பகுதியில் மதுப்பிரியர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
போத்தலை உடைத்து குத்தியதில் வயிற்றில் படுகாயமடைந்ததுடன் இவர்களின் தாக்குதல்களுக்கும் இலக்கான இளம் குடும்பஸ்தரான கல்வயலைச் சேர்ந்த சோமபாலன் குணதீபன் (வயது 31) என்பவர் சாவச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை அன்றைய தினம் இரவு சாவகச்சேரி காளிகோயில் பகுதியில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பஷன் மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக