இந்த சம்பவ காட்சிகள் அப்படியே பாதுகாப்புக் கெமராவில் பதிவாகியுள்ளன. ஷான் ஓமலி என்ற இளைஞரே இவ்வாறு விழுந்துள்ளார். கேம்பிரிட்ஜ் மசாசூசெட்ஸ் பகுதியில் எலிவைப் ஸ்டேஷனில் ஞாயிற்றுக் கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மின்சாரப் படிக்கட்டை முறைப்படி பயன்படுத்தாமல் அதன் பக்கவாட்டில் கைப்பிடியில் அமர்ந்து பயணித்தபோதே அவர் விழுந்துள்ளார்.முதலில் இவர் போதை காரணமாக கைப்பிடி பகுதியில் இருந்து இடறுகின்றார்.அனால் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே காரியத்தில் ஈடுபட்டே அவர் கீழே விழுகின்றார்.
சுமார் 20 அடி உயரத்தில் இருந்து விழும் இவர் சிறிது நேரம் அசைவின்றி கிடக்கின்றார்.அதன் பிறகு அவரின் நண்பர்கள் அங்கு ஓடி வந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.அவரின் முழங்கையில் முறிவு ஏற்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது
0 கருத்து:
கருத்துரையிடுக