புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பாகிஸ்தானில், 6 வயது இந்து, பெண் குழந்தை, கும்பலால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.நாடு பிரிவினையின் போது, பாகிஸ்தானில் லட்சக்கணக்கில் வசித்த இந்துக்கள், இப்போது, சில நூறு பேர்களாக சுருக்கப்பட்டுள்ளனர். அடிப்படை உரிமைகள் கூட, இந்துக்களுக்கு, அங்கு மறுக்கப்படுகிறது. எவ்வித பாதுகாப்பும், இந்துக்கள், சீக்கியர்களுக்கு அந்த நாட்டில் கிடையாது.

இந்நிலையில், அந்நாட்டின், சிந்து மாகாணத்தின், குலாம் நபி ஷா என்ற கிராமத்தில், தன் பெற்றோருடன் வசித்து வந்த, 6 வயது பெண் குழந்தை, அங்குள்ள பள்ளிக்கூடம் ஒன்றில், 1ம் வகுப்பு படித்து வந்தாள்.கடந்த, 3ம் தேதி, பள்ளி அருகே விளையாடிய சிறுமியை, கும்பல் ஒன்று கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.

இதில், கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது.குழந்தையை கண்டெடுத்த பெற்றோர், அதற்கு சிகிச்சை அளிக்க கூட முடியாமல் தவித்தனர். 10 நாட்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த அந்த குழந்தையின் உடல் நிலை, மிகவும் மோசமானதை அடுத்து, இரண்டு நாட்களுக்கு முன், பாகிஸ்தானில் உள்ள, ஐதராபாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

 குழந்தையின் உடல் நிலை, மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும், குலாம் நபி ஷா ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில சமூக நல அமைப்புகள், இந்து குழந்தையின் குடும்பத்திற்கு, உதவி செய்து வருகின்றனர்.உள்ளூர் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் தலைமையில், கும்பல் ஒன்று, இந்த கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top