புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இனங்காணப்பட்ட இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும்  பாறைகள் உருண்டு விழக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும்  தேசிய கட்டிட ஆராய்ச்சி
அமைப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

மண்சரிவுகள் இடம்பெறும் என இனங்காணப்பட்ட கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, கேகாலை,  உள்ளிட்ட 18 மாவட்டங்களிலேயே இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி, மாத்தளை மற்றும் ஏனைய பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பல வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வஸ்கமுவ -  வஸ்கமுவ, வில்கமுவ, வஸ்கமுவ வீதிகள் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடும் மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  மழையுடன் கூடிய காலநிலை நீடித்துக்கொண்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.  (சத்துரங்க பிரதீப், மகேஷ் கீர்த்திரட்ன,ஷேன் செனவிரட்ன)

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top