கடுமையான விரதப்போக்குடன் வாழக்கூடிய பூசாரிகள், சன்னியாசிகளில் ஒரு சிலர் காம லீலைகளில் ஈடுபட்டதாக சிக்கிக் கொள்கின்றனர். இது ஏன்?
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த கிரகங்களின் தசை நடக்கும் போது அவர்கள் பாதை மாறி காம லீலைகளில் ஈடுபட நேரிடும்.
ஜோதிடத்தில் சந்திரனை பலவீனப்படுத்தும் கிரகங்களும் உள்ளன. அதுபோன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது சம்பந்தப்பட்டவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சந்திரன் பலவீனமாக இருந்தால் காம இச்சைகள் அதிகரிக்கும்.
இதேபோல் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது பொதுவாகவே காம இச்சை அதிகரிக்கும். அதுபோன்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர் தன்னை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனம் போன போக்கில் காம லீலைகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை, அவமானம் ஆகியவற்றை ஏற்க நேரிடும்.
0 கருத்து:
கருத்துரையிடுக