ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில்லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழுமை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்காது. குனிந்தபடியே நடப்பதும்,
வளைந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும்.
பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங்கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்காரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால்,பலரும் சரியான முறையில் நடப்பதில்லை; உட்காருவதும் இல்லை.
குனிந்த நிலையில் நடப்பவர்களுக்கு, நெஞ்சுப் பகுதியும், சுவாசப் பகுதி அமைப்புகளும், நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன. குனிந்தபடியே நடக்கும்போது, ஆழ்ந்து சுவாசித்தாலும், அவர்களுக்கு தேவையான அளவு பிராண வாயு கிடைப்பதில்லை. உடலுக்குத் தேவையான அளவு காற்று கிடைக்காத போது, தளர்ச்சியும் உற்சாகக் குறைவும் ஏற்படும்.
குனிந்தநிலையில் நடப்பவர்களுக்கு, முதுகெலும்பு வளைந்த நிலையில் இருக்கும். அதனால், அவர்களின் ஜீரணத்திலும் பிரச்னை ஏற்படும். சிலர், தலையை நேராக வைத்திருக்காமல், முன்புறமாக இழுத்து, இழுத்து நடப்பர். அதனால், அவர்களின் கழுத்தின் இரு பகுதி தசைகளிலும், முது கெலும்பின் தசைப் பகுதியிலும், அழுத்தம் ஏற்படும். அப்போது, உடல்வலியும், முதுகெலும்பு வலியும் ஏற்படும்.
நடை, நான்கு கட்டங்களின் இணைப்பாக இருக்கவேண்டும். முதலில், குதிகாலை நன்றாக தரையில் ஊன்ற வேண்டும். இரண்டாவதாக, கால் முழுவதையும், அழுத்தமாக ஊன்ற வேண்டும். மூன்றாவதாக, விரல்களை நிலத்தில் ஊன்றி, குதிகாலை உயர்த்த வேண் டும். நான்காவதாக, காலைத்தூக்கி உயர்த்த வேண்டும். இதுஒரு காலின் நிலைதான். இதேபோல், அடுத்த காலின் இயக்கமும் இருக்க வேண்டும். இருகால்களும் இப்படி இயங்கும் நேரத்தில், கைகளும் அசைக்கப்பட வேண்டும். இது தான் சரியான நடை.
நடக்கும்போது, கால் பாதங்கள் இரண்டும் நேராக இருக்க வேண்டும். சரிந்த நிலையிலோ, வளைந்த நிலையிலோ கால்களை தூக்கி வைக்கக் கூடாது. நடக்கும் போது, உட லின் எல்லா பகுதிகளும் ஒரே மாதிரி நேர்க் கோட்டில் இருக்க வேண்டும். பெண்கள், கால் பாதங்களை தூக்கி வைத்து நடக்க வேண்டும். செருப்பு தரையில் உரசும் சத்தமோ, நடக்கும் சத்தமோ கேட்கக் கூடாது.
சில பெண்கள், நடையை பேஷன் என்று கருதி, கால் விரல்களை மட்டும் ஊன்றிக் கொண்டு நடப்பர். அது, முறைப்படியான நடை இல்லை. அந்த மாதிரி நடப்பது, உடல் ஆரோக்கியத்திற்கும் கேடானது.
வீடு, அலுவலகத்திலோ இருக்கும்போது, நன்றாக நிமிர்ந்து உட்கார வேண்டும். சிறிதுநேரம் நிமிர்ந்து இருந்தால், சிரமமாக இருப்பவர்கள், எழுந்து நடந்து, மீண் டும் உட்கார்ந்து கொள்ள வேண்டும். முதுகெலும்பு இருக்கையோடு சேர்ந்து இருக்கவேண்டும். பாதங்களையு ம், காலோடு சேர்த்து நிலத்தில் சமமாக வைக்க வேண்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக