நடிகர் சூர்யாவின் சிங்கம்-2 இசை வெளியீடு ஜூன்-01
சிங்கம் 2 இசை வெளியீட்டு விழா ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது.
சிங்கத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 2 வை உருவாக்கியுள்ளனர். சிங்கத்தில் நடித்த அதே நடிகர்கள். வில்லன் பிரகாஷ்ராஜ் முதல் பாகத்தில் இறந்துவிட்டதால் இரண்டாம் பாகத்தில் அவர் இல்லை. கூடுதலாக ஹன்சிகா சேர்க்கப்பட்டிருக்கிறார். அதேபோல் வில்லன்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் சில பாடல்களை வெளிநாட்டில் படமாக்கியிருக்கிறாராம் ஹரி. பொதுவாக தனது படங்களுக்காக வெளிநாடு செல்லாதவர் ஹரி. இந்தமுறை தென்னாப்ரிக்கா, தான்சானியா என வேர்ல்ட் டூர் போயிருக்கிறார். இங்கெல்லாம் அதிபயங்கர சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன.
ஜூன் 1ஆம் தேதி இசை வெளியீட்டு விழா இருப்பதால் ஜூன் இறுதிக்குள் படம் வெளியாகும் என நம்பலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக