புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 48-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் தொடங்கியது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி
டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெயவர்த்தனே- சேவாக் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். என்றாலும் அவர்களது விக்கெட்டை காப்பாற்ற முடியவில்லை. ஜெயவர்த்தனே 12 பந்தில் 11 ரன்னும், சேவாக் 17 பந்தில் 8 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக டெல்லி டேர்டெவில்ஸ் அணி 19.1 ஒவரில் 80 ரன் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த ஐ.பி.எல். தொடரில் இதுதான் குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.

ஐதராபாத் அணி சார்பில் ஸ்டெயின், பெரேரா, சமி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. தவான்- பார்த்தீவ் படேல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் அமைத்தது.

தவான் 22 ரன்களும், படேல் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த சங்கக்காரா 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். சமி 18 ரன்கள் எடுக்க ஐதராபாத் அணி 4 விக்கெட்டை மட்டும் இழந்து 13.5 ஓவரில் 81 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி 11 போட்டிகளில் 7-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top