நடிகர் பரத்தின் 555 படம் மே 15 ரிலீஸ்?
சசி இயக்கியிருக்கும் 555 படம் இந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை தான் இயக்கியப் படங்களில் மென்மையான உணர்வுகளை கையாண்டு வந்த இயக்குனர் சசி முதல்முறையாக அதிரடி ஆக்ஷன் பின்னணியில் எடுத்திருக்கும் படம் 555. இந்தப் படத்துக்காக பரத் கடுமையாக உழைத்திருக்கிறார். முக்கியமாக படத்தில் வரும் மூன்று கெட்டப்புகளில் ஒன்று கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக ஆறு மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைத்துள்ளார்.
இன்னொன்று சாதாரணமான கெட்டப். மூன்றாவது மொட்டைத் தலையுடன் மெலிந்த உடலமைப்பு கொண்டது. இந்த கெட்டப்புக்காக பட்டினி கிடந்து உடலை இளைக்க வைத்திருக்கிறார்.
எரிக்கா பெர்ணாடஸ், மிர்திகா என இரு ஹீரோயின்கள். சந்தானமும் இருக்கிறார். சமீபத்தில் இதன் பாடல்கள், ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
பரத் தனது கேரியரின் திருப்புமுனை படமாக அமையும் என நம்பும் 555 மே 15 அன்று திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான வேலைகளை தயாரிப்பு தரப்பு முடுக்கி விட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக