அமெரிக்காவில் மாணவரை தகாத உறவுக்கு அழைத்த விமானப்படை பெண் பயிற்சியாளர்
அமெரிக்க விமானப்படை பெண் பயிற்சியாளர், தனது மாணவரை செக்ஸூக்கு அழைத்த குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, 30 நாட்கள் கடும் பணி தண்டனை (hard labor) வழங்கி மிலிட்டரி
கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் இந்த பயிற்சியாளரின் பதவி நிலையும், airman first class என்ற நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ (Base San Antonio) விமானப்படை முகாம் செக்ஸ் பயிற்சி மையம் போல மாறிவிட்டது என எழுந்த புகார்களை அடுத்து, அங்கு விசாரணை நடைபெற்றது. அதில், விமானப்படையின் 30 பயிற்சியாளர்கள், தமது மாணவர்களை செக்ஸூக்கு அழைத்த விவகாரம் வெளியாகி அதிர வைத்தது.
இந்த 30 பேரில், தற்போது தண்டனை வழங்கப்பட்ட எமிலி அலன்தான், ஒரேயொரு பெண். இவர் விமானப்படை பயிற்சிக்கு வந்த ஆண் மாணவர் ஒருவரை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொண்டார் என்பது கோர்ட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க விமானப்படைக்கு மிக மோசமான களங்கமாக, சான் ஆன்டோனியோ விமானத் தள விவகாரங்கள் தற்போது அடிபடுகின்றன.
0 கருத்து:
கருத்துரையிடுக