புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-நெல்லை அருகே மாம்பழச்சாறு அருந்திய பெண் ஒருவர் பலியானார். மேலும் அவரது கணவன், குழந்தைகள் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து.

இவர் தனது மனைவி வள்ளித்தாய் 40, மற்றும் குடும்பத்தினருடன் தாழையூத்து பஸ் ஸ்டாண்ட்டில் இருந்த பழக்கடையில் ஜூஸ் குடித்தனர். இந்த ஜூஸ் குடித்த சில நிமிடங்களில் வள்ளித்தாயின் உடலில் மாறுதல் ஏற்பட்டது. அவரை உடனடியாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.. சிறிது நேரத்தில் பேச்சிமுத்து, அவரது தாயார் சிதம்பரம், மகள்கள் மாரியம்மாள் 10, ஆறுமுகக்கனி 7, மகன் உடையார் 5, ஆகியோரும் அதே பழச்சாறு குடித்ததால் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

எனவே அனைவரும் நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூஸ் தயாரிக்கப்பயன்படுத்திய மாம்பழம், கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்தது என தெரிகிறது.

இதனால் பழச்சாறு விஷமாக மாறியுள்ளது. இதை அறியாமல் குடித்த வள்ளித்தாய் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top