தமிழில் நயன்தாராவும்,தெலுங்கில் அனுஷ்காவும் முதல் இடத்தில்!
நயன்தாரா தமிழிலும் அனுஷ்கா தெலுங்கிலும் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு காதல் சர்ச்சைகள் சினிமாவில் பின்னடைவே ஏற்படுத்தும் என
எதிர்பார்த்தனர். ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்துக்கு பிறகு ஒரு வருடம் இடைவெளி விட்டு நடிக்க வந்ததால் பழைய மார்க் கெட்டை பிடிக்க முடியாது என்றே பேச்சு நிலவியது. ஆனால் அவற்றை தவிடு பொடியாக்கும் வகையில் அஜீத்துடன் வலை, ஆர்யாவுடன் ராஜா ராணி, உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதல் படங்களில் நடிக்கிறார்.
இந்தியில் வித்யாபாலன் நடித்து ஹட்டான கஹானி படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார். புதுமுக நடிகைகள் வரத்து அவரை கடுகளவு கூட ஆட்டம் காண வைக்க வில்லை. அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.
இது போல் அனுஷ்கா தெலுங்கு பட உலகை கலக்குகிறார். பிரபல இயக்குனர் ராஜமவுலி டைரக்டு செய்யும் பாகுபாலி என்ற தெலுங்கு படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அருந்ததி போல் இந்த படமும் வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கின்றனர். இரு நடிகைகளும் தமிழ், தெலுங்கு பட உலகில் அசைக்க முடியாத சக்திகளாக உள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக