புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெள்ளவத்தையில் தங்கி இருந்த மட்டக்களப்பு தமிழ் யுவதி ஒருவர் காதல் பிரச்சினையால் உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து உள்ளார்.


இவர் கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் பயின்றவர். சட்ட முதுமாணி படிப்பை மேற்கொள்ள சில வருடங்களுக்கு முன் லண்டன் சென்று இருந்தார்.

லண்டனில் இருந்து வந்து சில வாரங்களான நிலையிலேயே தற்கொலை செய்து உள்ளார்.

இவருக்கு மருத்துவ மாணவன் ஒருவருடன் முன்பு காதல் தொடர்பு இருந்தது என்றும் நாடு திரும்பிய இவருக்கு மாஜி காதலன் பல வழிகளிலும் தொந்தரவுகள் கொடுத்து வந்திருக்கின்றார் ஏன்றும் இந்நிலையிலேயே மனம் உடைந்து போய் இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்றும் தெரிகின்றது.

கடுமையான தீக்காயங்களுக்கு உட்பட்ட இவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் இவரை காப்பாற்ற முடியவில்லை.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top