புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பையில் உள்ள பிரபல ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தின் தயாரிப்புக்களில் ஒன்றான குழந்தைகளுக்கான பவுடரில்
புற்றுநோயினை ஏற்படுத்தும் பொருள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2007ம் ஆண்டு ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.

இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜோன்சன் அன்ட் ஜோன்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top