புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சுவிட்சர்லாந்தின் UBS வங்கியாளர் ஜுயர்க் புயர்கின்(Juerg Buergin) என்பவர் சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலாளியாக ஒப்பந்தம் செய்து அப்பெண்ணுடன் உறவு கொண்டார் என்பதால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

சிங்கப்பூர் இத்தொழிலுக்கு சட்ட அந்தஸ்து பெற்றிருந்தாலும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளை உறவுக்கு அனுமதிப்பதில்லை. ஆனால் இவர் 17 வயது பெண்ணுடன் உறவு கொண்டதால் இவரை பொலிசார் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து அவர் நீதிமன்றத்தில் கூறுகையில், இந்தப் பெண்ணை இணையதளம் மூலமாக ராபர்ட் ஜேம்ஸ்(Robert James) என்ற பெயரில் ஒப்பந்தம் செய்ததாகவும், அவளுக்கு வயது பதினேழு தான் என்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இவரது வழக்கிற்கு வருகின்ற மே எட்டாம் நாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இவரோடு இன்னும் 50 பேர் மீதும் இந்தப் பெண்ணுடன் உறவு கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த 50 பேரில் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் ஹோவார்டு ஷா(Howard Shaw), ஆசியாவின் திரைப்படத் தயாரிப்பாளர் ரன்மே ஷா(Runme Shaw) போன்றோரும் உள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top