புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நகரக்கல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம்). நகரில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.


கவிதாவும், இன்னொரு கல்லூரியில் படிக்கும் மாணவன் சஞ்சீவ ரெட்டியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பள்ளியில் படிக்கும் போதே ஏற்பட்ட இவர்களது காதல் கல்லூரியிலும் தொடர்ந்தது.

உன்னை திருமணம் செய்வதாக கூறி சஞ்சீவ ரெட்டி காதலி கவிதாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்தார். கடந்த 2 வாரத்துக்கு முன்பு சஞ்சீவ ரெட்டி காதலியை தனது அறைக்கு வருமாறு அழைத்தார்.

கவிதா அங்கு சென்ற போது சஞ்சீவரெட்டியின் நண்பர் சிவா அங்கு இருந்தார். அறையில் சஞ்சீவரெட்டி கவிதாவுடன் உல்லாசமாக இருந்தார். பின்னர் அவளை கட்டாயப்படுத்தி தனது நண்பருக்கு விருந்தாக்கினார்.

சிவாவுடன் கவிதா உல்லாசமாக இருப்பதை தனது செல்போனில் படம் எடுத்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு செல்போனில் எடுத்த படத்தை கவிதாவிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டினார்.

பணம் தராவிட்டால் படத்தை சி.டி.யை காப்பி செய்து நண்பர்களுக்கு விற்பேன் என்று கூறினார். இதனால் பயந்து போன கவிதா கஷ்டப்பட்டு பணம் திரட்டி ரூ.5 ஆயிரம் கொடுத்தார்.

அதன் பிறகும் அவன் செல்போனில் உள்ள ஆபாச படத்தை அழிக்க வில்லை. மீண்டும் ரூ.30 ஆயிரம் கேட்டு மிரட்டினார். இதனால் வேதனை அடைந்த கவிதா மகளிர் அமைப்பின் உதவியுடன் பொலிசில் புகார் செய்தார்.

பொலிசார் விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும் போதே சஞ்சிவரெட்டி செல்போனில் கவிதாவுடன் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினான். இல்லையேல் ஆபாச படத்தை சி.டி. போட்டு விற்பனை செய்து விடுவதாக மெசேஜ் அனுப்பினான்.

பொலிசார் ஆலோசனை படி கவிதா பஸ் நிலையம் வா பணம் தருகிறேன் என்று சஞ்சிவரெட்டியிடம் பேசினார். அதன்படி குறிப்பிட்ட பஸ் நிலையத்தில் காத்து நின்றார்.

சஞ்சிவரெட்டி அங்கு வந்ததும் மறைந்து நின்ற பொலிசார் அவரை கைது செய்தனர். அங்கு வந்த மகளிர் அமைப்பு பெண்கள் சஞ்சிவரெட்டிக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் சஞ்சிவரெட்டியை பேச வைத்து அவரது நண்பர் சிவாவையும் பொலிசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கவிதா பற்றிய ஆபாச படம் மற்றும் சி.டி.யை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top