புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகளுடன் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்ளும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்ட பேராசிரியர் இ. இளங்குமரன் துறைத் தலைவர் பதவியிலிருந்து பல்கலைக்கழக
நிர்வாகத்தினால் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின், பொருளியல் துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றி வந்த பேராசிரியர் இளங்குமரன் பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொள்ள முற்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இப்பிரச்சினை சம்பந்தமாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் துறைத் தலைவர் மீது யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் 25 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவையாவன-

மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல், பெண்களை தனியாக அறைக்கு வருமாறு கூப்பிடுதல், பரீட்சை வினாத்தாள்கள் எடுப்பதற்கு ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக வரவேண்டும் என வற்புறுத்துகின்றமை,

தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு குறுந்தகவல் அனுப்பியமை, தனக்கு எதிராக செயற்படுபவர்களை காட்டித்தருமாறு வற்புறுத்தியமை, தன்னுடைய பாடத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியமை, இதனோடு பரீட்சை வினாத்தாளில் பெயர் எழுதும்படி வற்புறுத்தியமை,

குறைந்த புள்ளி எடுப்பவர்களைத் தனது பிரத்தியேக அறையில் வந்து சந்திக்கும்படியும் சந்தித்தால் மட்டுமே புள்ளி வழங்குவேன் என்றும் கூறியமை, தனது பிரத்தியேக அறைக்கு 2 மணிக்குப் பின்னர் தனியாக வந்து சந்திக்க கூறுகின்றமை,

தன் செயற்பாடுகளுக்கு உடன்பட்டால் தான் நல்ல புள்ளிகளை வழங்குவேன் என அச்சுறுத்துகின்றமை, தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்கு இறுதியாக புள்ளிச் சான்றிதழ் வழங்கும் போது இது முழுமையான பட்டம் அல்ல என எழுதி விடுவேன் எனப் பயமுறுத்தியமை,

துணைப்பாடமாகத் தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்குத் தற்காலிக விரிவுரையாளர் பதவியை வழங்க மாட்டேன் எனக் கூறியமை, துணைப் படத்தனை வேறு துறைகளிலோ வேறு பாடங்களிலோ எடுக்க கூடாது என வற்புறுத்துகின்றமை,

தனியாக சந்திக்கும் மாணவிகளிடம் பரீட்சை விடைத் தாள்களின் பின்னர் வெற்றுத் தாளைகளைச் சேர்த்துக் கட்டுமாறு தனக்கு இசைவாக நடக்கும் பட்சத்தில் உயர்ந்த புள்ளிகளை வழங்குவதற்கு வாய்ப்பாக அமையும்.

தொலைபேசி எண் கேட்டபோது தொலைபேசி இல்லை எனப் பதில் கூறியமைக்கு புதிய தொலைபேசி வாங்கித்தரவா? எனக் கூறியமை, தொலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியபோது அதற்கு பதிளிக்காத மாணவிகளை அறைக்குள் அழைத்து மிரட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

அனைத்து மாணவிகளுடைய விபரங்களையும் பதிவாளர் அறையில் சென்று முகவரி உட்பட அனைத்து விடயங்களையும் பெறுவேன் என மிரட்டியமை, தனக்கு இசைவாகாத எந்தவொரு மாணவியையும் சிறப்புக் கலைப் பாடத்தலிருந்து பொதுக்கலைப் பாடமாக மாற்றி வெளியேற்றுவேன் என கூறுகின்றமை,

தொலைபேசி எண் கேட்டுக் கொடுக்காத பெண் பிள்ளைகளுக்கு இறுதிப் பரீட்சைக்கு கையொப்பம் இடமாட்டேன் என்று மறுத்துள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

வகுப்பறையில் பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த ஆண் மாணவர்களை ரியூட்டோரியல் எழுதித் தரும்படியும் பெண் பிள்ளைகளைத் தனித்தனியாக தனது அறையில் சந்திக்கும்படியும் கூறியமை,

அவருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட பொது அதற்குக் காரணம் பொருளியல்துறை மாணவிகளே எனக் கூறி அதற்காகவே முதலாம் பருவ Mathematics Paper பரீட்சையில் மிகக் கடினமாகப் போட்டேன் என வகுப்பறையில் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தமை.

தான் கூறும் விடயங்களை வெளியில் கூறக் கூடாது என்றும் அப்படிக் கூறும் பட்சத்தில் நீங்கள் எப்படி சித்தியடைந்து போவீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன் எனவும் வகுப்பில் கூறியமை,

பீடாதிபதிக்கோ ஏனையோர்களுக்கோ தான் கட்டுப்பட மாட்டேன் என்றும் ஏனைய விவுரையாளர்களைக் கூடப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்றும் அதற்கேற்ப மாணவர்களை நடந்து கொள்ளும்படியும் கூறியமை.

மேற்குறித்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் ஒன்றியதினால் இவ்விடயம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இதனைத் தொடர்ந்து இம்மாதம் 16ம் திகதி முதல் இவரது துறைத் தலைவர் பதவியினை பல்கலைக்கழக நிர்வாகம் தற்காலிகமாக இடைநிறுத்தியதோடு, இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு 2 பேர் கொண்ட விசேட குழுவொன்றையும் நியமித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள் உள்ளடக்கிய ஐந்து பேர் மாணவிகளுடன் தொடர்ந்தும் பாலியல் ரீதியான வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என கடந்த வருடம் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இவரது பெயரும் உள்ளடங்கியிருந்தது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top