புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நிகழும் விஜய வருஷம் வைகாசித்திங்கள் 2ம் நாள் 16.05.2013 வியாழகிழமை தொடக்கம் 29.05.2013 புதன்கிழமை வரைக்கும் ஜேர்மன் நாட்டில் ஹம் மாநகரில் வீற்றிருக்கும் காமேஸ்வரரை பதியாக கொண்டுள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு
மகோற்சவம் நடைபெற அம்பாளின் அருளும் குருவின் ஆசியும் கிடைத்துள்ளது.
இவ் விழாக்காலங்களில் அனுதினமும் காலை 7.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 10.00 மணியளவில் மூலஸ்தான பூஜையும் 11.00 மணிக்கு கொடிதம்ப பூஜையும் அதனைத் தொடர்ந்து 12.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா வருவா. மதியம் 1.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி, திருமடத்தில் அன்னதானமும் வழங்கப்படும்.
  மாலை 4.00 மணிக்கு மூலஸ்தான விஷேட பூஜையும் மாலை 5.15 மணியளவில் கொடிதம்ப பூஜையும் மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் காமாக்ஷி அம்பாளுக்கு மந்திர புஷ்பா பாராயணம், வேத பாராயணம், கண பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், தேவார பாராயணம், இவையனைத்தும் நிகழ்வு பெற்று, சர்வ வாத்திய பிரியையான சர்வாம்பிகை உலகை காக்கும் பொருட்டு மாலை 7.00 மணியளவில் உள்வீதி உலா வருதலுடன் யாக தரிசனமும் நிகழ்வு பெற்று , தொடர்ந்து வெளி வீதிஉலா வருதலும் நிகழ்வுபெற்று, இரவு 8.30 மணியளவில் அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும். இவ் வேளையில் அனைவரும் ஆசார சீலர்களாக வருகை தந்து அம்பாளை வழிபட்டு அனைத்துச் செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீர்களாக!
ஜேர்மனி ஹம் காமாட்சி அம்மன் ஆலயம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு





இவ்வருட மகோற்சவ விபரம்
16.05.2013 – வியாழக்கிழமை கொடியேற்ற திருவிழா
23.05.2013 - வியாழக்கிழமை 8 ம் நாள் வேட்டைத் திருவிழா
25.05.2013 – சனிக்கிழமை 10 ம் நாள் சப்பறத் திருவிழா
26.05.2013 - ஞாயிற்றுக்கிழமை 11 ம் நாள் தேர்த் திருவிழா
27.05.2013 – திங்கட்கிழமை 12ம் நாள் தீர்த்தத் திருவிழா




ஆலய முகவரி :
Hindu Shankara Sri Kamadchi Ampal Temple e.V
Siegenbeck Str 04-05,
59071 Hamm- Uentrop
தொலைபேசி:- 02388 30 22 23
தொலைநகல் :- 023 88 30 22 24

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top