புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.

கணவன் மனைவி போல் 7 மாதங்களாக குடும்பம் நடத்திய 24வயது இளைஞன் குறித்த சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்தியுள்ளதாகவும், குறித்த சிறுமி 14 வயதும் 6 மாதங்களையும் கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் எதிர்வரும் மே 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top