கம்பஹாவில் வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
கம்பஹா மாவடடம் நிட்டம்புவ கிரிந்திவெல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனியார் பஸ் ஒன்றும் ஆட்டோவும் மோதிக் கொண்டதில் இவ் விபத்து
இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆட்டோவின் சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆட்டோவில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் வதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக