புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற புதிய இந்திப் படம் ரூ.100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இது குறித்து சென்னை எக்ஸ்பிரஸ் படகுழுவினரிடம் கூறுகையில், காதல் சொல்லும் காட்சி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை முருகன் கோவிலில் ஷாருக்கான், தீபிகாபடுகோன் ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

தீபிகாவிடம் ஷாருக்கான் தனது காதலை கூறும் காட்சி கோவிலின் உட்புற பகுதியில் படமாக்கப்பட்டது.

படப்பிடிப்பு நடத்த இந்து அறநிலையதுறையின் அனுமதி பெறாமல் கோவிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் அதிகாரிகள் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர்.

இதனால் சில காட்சிகள் எடுக்கப் படாமலேயே படப்பிடிப்பு ரத்து செய்யபட்டது. பின்னர், படப்பிடிப்பு குழுவினர் உரிய அனுமதி பெற்று மீதம் உள்ள காட்சிகள் படமாக்கப்படும் என்று அறிவித்தனர்.

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் வட்டமலை முருகன் கோவில்போல் செட் போட்டு மீதம் உள்ள காட்சிகளை படமாக்க திட்டமிட்டு உள்ளோம்.

வட்டமலை முருகன் கோயில் உட்புறம் அளவு கணக்கீடு செய்யப்பட்டு அதேபோல் மும்பையில் செட் போட்டு அடுத்த சில காட்சிகள் படமாக்கப்படும் என்று தெரிவித்தனர்.

படப்பிடிப்பு குழுவினர் கோவில்களை அசுத்தம் செய்து விடுகின்றனர் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக அறநிலையத்துறை தரப்பில் கூறப்பட்டது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top