புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ் தொற்று காரணமாக மொனராகலை மாவட்டத்தில் உயிரிழப்பு ஒன்று பதிவாகியுள்ளது.



மொனராகலை, பிபில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரே AH1NI வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவரது பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கர்ப்பிணி தாய் புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ் தாக்கத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ் தாக்கத்தில் மொனராகலை வைத்தியசாலையில் வேறு எந்த நோயாளர்களும் பாதிக்கப்படவில்லை என வைத்தியசாலையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 10 கர்ப்பிணி தாய்மார்கள் கொழும்பு சேய வைத்தியசாலையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரு தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர்.

தற்போது புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ: பரவல் குறித்து அத தெரண சுகாதார அமைச்சிடம் வினவியது,

வைரஸ் தாக்கத்திற்கான அறிகுளிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் விசேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.

புதிதாக பரவிவரும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தைபெற தயாராகும் காலத்தில் அவர்களுக்கு நோய்த்தடுப்பு சக்தி குறைவதாகவும் அதன்போது குறித்த வைரஸ் உடம்பினுள் உட்புகும்போது பாரிய சிக்கல் ஏற்படும் எனவும் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இருமல், காய்ச்சல், தலைவலி, உடம்புவலி போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அது இன்புளுவன்ஸா AH1NI வைரஸாக இருக்கலாம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

விலங்குகள் மூலம் உருவாகும் இன்புளுவன்ஸா AH1NI வைரஸ், விரைவில் பரவிச் செல்லக்கூடியது எனவும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top