புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நடிகர் எம்.ஜிஆர். சிவா சென்னையில் இன்று உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 28.



எம்.ஜி.ஆர். சிவாவுக்கு சொந்த ஊர் பழனி. இவர் சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி இருந்து மேடை கச்சேரிகளில் எம்.ஜி.ஆர் வேடம் போட்டு நடித்து வந்தார். லஷ்மன் ஸ்ருதி, யு.கே. முரளி உள்ளிட்ட பல இசைக்குழுக்களின் கச்சேரிகளில் எம்.ஜி.ஆர் வேடத்தில் மேடை ஏறி நடனம் ஆடினார். வாலிபன் சுற்றும் உலகம் படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார். பிதா மகன், அழகன் அழகி படங்களிலும் நடித்து உள்ளார்.

எம்.ஜி.ஆர். சிவாவுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று உடல் நிலை கவலைக்கிடமானது. இன்று அதிகாலை 5 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். அவரது உடல் வேன் மூலம் பழனிக்கு கொண்டு செல்லப்பட்டது.




0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top