இந்தியாவில் 88 வயதுப் பெண்ணின் வயிறுக்குள்ளிருந்து கத்தரிக்கோல் மீட்பு
ஆந்திர மாநிலம் செங்கோல் அருகே உள்ள மாவிப பாளையத்தைச் சேர்ந்தவர் சவுபாக்கியம்மா. 88 வயதான இவர் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை
பெற்றும் குணமடையவில்லை.
இதையடுத்து அவர் செங்கோலில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். டாக்டர்கள் வயிற்றில் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். ஆனால் வயிற்றுக்குள் எந்த கோளாறும் இல்லை. இருந்தாலும் சவுபாக்கியம்மா வலியால் துடித்தார்.
இதையடுத்து அவரது உடல் முழுவதையும் டாக்டர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது மலக்குடலில் சிறிய கத்திரிக்கோல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை மூலம் அந்த கத்திரிக்கோலை டாக்டர்கள் அகற்றினார்கள்.
தற்போது அந்த பெண் குணமடைந்து வருகிறார். 22 ஆண்டுகளுக்கு முன்பு சவுபாக்கியம்மாவுக்கு கர்ப்பபை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது. அதுமுதலே வயிற்று வலியும் அவரை தொற்றிக் கொண்டது.
அறுவை சிகிச்சையின் போது தவறுலாக கத்திரிக்கோலை வைத்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனாலும் அது மலக்குடல் வரை சென்றது எப்படி என்பது டாக்டர்களுக்கு வியப்பாக உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக