நடிகை நயன்தாரா கர்ப்பிணி கோலத்தில் கணவரை தேடி வீதியில் ஓடி அலையும் காட்சி
கணவரை தேடி அலையும் கர்ப்பிணி பெண் வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி. இப்படம் தமிழ், தெலுங்கில் ரீமேக்
செய்யப்படுகிறது.
கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை தேடி வீதி வீதியாக அலையும் கதாபாத்திரம்.
இப்படம் கொல்கத்தாவில் படமானபோது வித்யாபாலன் நடித்த காட்சிகள் ஜனநடமாட்டம் மிகுந்த பகுதியில் தத்ரூபமாக படமாக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது.
இதே காட்சிகளில் தற்போது நயன்தாரா நடிக்கிறார். இதற்காக தலைவிரி கோலத்தில் கர்ப்பிணிபோல் வேடம் அணிகிறார்.
சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இந்நிலையில் நயன்தாரா நடித்த காட்சிகள் நேற்று ஐதராபாத்தில் படமாக்கப்பட்டது. பெரும்பாலான காட்சிகள் செட் போட்டு படமாக்கினாலும் சில காட்சிகளை ஐதராபாத் சாலைகளில் படமாக்கினர்.
அப்போது ரசிகர்கள் நயன்தாராவை சூழ்ந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக